சைனீஸ் காய்கறிகளுக்கு மலைத்தோட்ட விவசாயிகளிடையே அதிக மவுசு

அதிகளவு வருமானம் தரக்கூடியது என்பதால், மலைதோட்ட காய்கறிகளுக்கு மாற்றுப் பயிரான சைனீஸ் காய்கறிகளை நீலகிரி விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.


நீலகிரி: அதிகளவு வருமானம் தரக்கூடியது என்பதால், மலைதோட்ட காய்கறிகளுக்கு மாற்றுப் பயிரான சைனீஸ் காய்கறிகளை நீலகிரி விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு சமவெளி பிரதேசங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மலை காய்கறிகளுக்கு மாற்றுப் பயிராக கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த கொய்மலர் சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்காத நிலையில், தற்போது, இந்த கொய்மலர் சாகுபடிக்காக அமைக்கப்பட்ட பசுமை குடில்களை சைனீஸ் காய்கறிகளான செல்ரி, புருக்கோலி, சைனீஸ் கேபேஜ், ஐஸ்ப்ரூக், ரோமன் உள்ளிட்ட 18 வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.



இங்கு விளையும் சைனீஸ் காய்கறிகளை, சென்னை, ஐதராபாத், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த விவசாயத்திற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், தற்போது நீலகிரி மாவட்டம் கிராமப் பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளை விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். தற்போது நல்ல மகசூல் கொடுத்து வரும் இந்த வகை காய்கறிகளை, வரும் காலங்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...