கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு தி.மு.க மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை : ஈரோடு தி.மு.க மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தி.மு.க மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம், அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், செல்வி, டி.ஆர்.டி.ராஜா ஆகியோரும் வந்தனர். 

அவர்களுக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின்போது, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க உயர்மட்ட செயற்திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...