அடிப்படை வசதிகள் வேண்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உக்கான் நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்றவற்றை செய்து கொடுக்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பிலும் மனு அளித்தும் நடவடிக்கை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...