கழிவு நீர் தொட்டியில் சிக்கி குட்டி யானை பலி

நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியின் கழிவு நீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியின் கழிவு நீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.



கூடலூர் அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று காலை விடுதியின் கழிவு நீர் தொட்டியில் கால் சிக்கிய நிலையில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இது குறித்து, விடுதி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியின் சமையல் அறைக்கு மிக அருகில் யானை உயிர் இழந்துள்ள நிலையில், எப்படி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரியாமல் போனது? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...