40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் கைது

திருப்பூரில் 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். ஷெரிப் காலனி பகுதியில் நூற்பாலை நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று மாலை வெளியூர் சென்றார். அப்போது அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தை வீட்டில் தனியாக இருந்தனர். இதை நோட்டமிட்ட ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதையறிந்த ராஜேஷ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...