கொதிக்கும் காபி கொட்டியதில் 4 வயது சிறுமி படுகாயம்

திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா, அந்தப் பகுதியில் உள்ள திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.நேற்று வழக்கம் போல சிறுமி காவியப்பிரியா பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளியில் வேலை பார்க்கும் ஆயா கையில் கொதிக்கும் காபியைக் கொண்டு சென்றதாகவும், எதிர்பாராதவிதமாக காபி முழுவதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காவியப்பிரியா மீது கொட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதில், சிறுமியின் உடலில் பெரும்பாலான பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி வலியால் அலறி துடித்த நிலையில், பள்ளி ஊழியர்கள் சிறுமியை மீட்டு காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

குழந்தையின் பெற்றோர்கள் இதுகுறித்து கூறுகையில், "பள்ளியில் சிறுமி காபி கொட்டியதன் காரணமாக காயம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். காயம் ஏற்பட்டு உடனடியாக கூறாமல், அரைமணி நேரத்திற்கும் மேலான பின்புதான் தகவல் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டும்", என்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை முத்துசாமி, வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...