திருநங்கைகளுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணை

அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை இரு திருநங்கைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை இரு திருநங்கைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

3-ம் பாலினத்தவரின் நலனிற்காக, 40 வயதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாக 3-ம் பாலினர் நலவாரியம் அமைத்தது, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 



அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வரும் எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகிய இரண்டு 3-ம் பாலினர்களும், தங்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பட்டம் படித்தும், வயது வரம்பைக் கடந்துவிட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நேர்வாக ஏற்றுக் கொண்டது. அவர்களை அரசு மருத்துவமனைகளில் முறையே நுட்புனர் நிலை-ll மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை -ll ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...