நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றும் நடவு செய்ய திட்டம் : நடிகர் விவேக் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜீன் 5-ம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜீன் 5-ம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.



உதகையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடவு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் வாரம் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு ''க்ரீன் கலாம்'' என்னும் அமைப்பின் மூலம் ஒரு கோடி மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு இது நாள் வரை 29 லட்சம் 'மரங்களை நடவு செய்துள்ளேன்.



மேலும், வரும் ஜூன் 5-ம் தேதி நீலகிரி வனத்துறை அளிக்கவுள்ள இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நீலகிரியில் நடுவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

பள்ளி மாணவர்கள் நீலகிரியை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகள் இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும்போது வேண்டும் என்றே பிளாஸ்டிக் பையில் போட்டுத் தரும்படி கேட்டேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது." என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...