அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய மர்ம நபர்கள்

பழனி அருகே மர்ம நபர்கள் சிலர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.


திண்டுக்கல்: பழனி அருகே மர்ம நபர்கள் சிலர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது மானூர் என்ற கிராமம் உள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள், அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் இருந்த அக்கட்சிக் கொடியை அகற்றி விட்டு பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றியுள்ளனர். இரவோடு இரவாக விஷமிகளால் செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கீரனூர் காவல் துறையினர் பா.ஜ.க. கொடியை அகற்றினர். தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...