தடையை மீறி கோவையில் 'பஸ் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது.


கோவை: 'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களைக் கைது செய்யவும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை மீறி, இந்த ஆண்டிலும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக கோவை வரும் தனியார் பேருந்து ஒன்றுக்கு வண்ண காகிதங்கள் ஒட்டி, மேளதாளங்களுடன் பவனி வந்தனர். மேலும், விமான நிலையம் தொடங்கி, நவ இந்தியா சிக்னல் வரை பேருந்தின் மீது ஈறி நடனமாடிய படி வந்தனர். இது பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளையும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சப்பட வைத்தது.



உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...