கோவையில் உலக சிட்டுக் குருவி தினத்தை கொண்டாடிய குழந்தைகள்

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

கோவை: உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

சிறுமுகையை அடுத்த காந்தவயல் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் நேற்று சிறுமுகை வன அலுவலர்களுடன் சிட்டுக் குருவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக வனத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிட்டுக் குருவி ஆர்வலர் குருசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். 



அப்போது, "சிட்டுக் குருவிகளுக்கு வாழ்வதற்குத் தகுந்தாற்போல் மரங்களில் கூடுகள் மற்றும் தானியங்களை வைக்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதனைச் செய்து வருகிறோம். அதனால், எங்கள் வீட்டின் அருகில் ஏராளமான சிட்டுக் குருவிகளை காண முடிகிறது." என்றார்.



தொடர்ந்தது, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன், தாமஸ் சாமுவேல் மற்றும் எஸ். சரவணன் உள்ளிட்டோ சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விவரித்தனர். 

"நகர்ப்புற பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு, மரபுசார் வீடுகளை மறந்து கான்கிரீட் கட்டிடங்களே கட்டுவதே காரணம்." என்று பூமிநாதன் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...