கவுரவ வனப் பாதுகாவலர்களை நீக்குமாறு மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களை சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களை சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மலை மாவட்டமமான நீலகிரியில், அதே சமயம் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டது. குறிப்பாக, முதுமலை, மசினகுடி, பொக்காபுரம் போன்ற பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதேசமயம், இப்பகுதியில் காலம் காலமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முதுமலை வன விலங்கு சரணாலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1968-ம் ஆண்டு 5 மைல்தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது. இதில், முதுமலை வன விலங்கு சரணாலயம் மட்டுமின்றி, 1 லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் சுற்றுவட்டார பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்தது. இதில், பொதுமக்கள் வாழும் மசினகுடி உள்ளிட்ட சில கிராமங்களும் வந்தன. மக்கள் வாழும் மற்றும் விவசாயம் செய்யும் 46 ஆயிரம் ஏக்கர் நிலமும் அடங்கும். 

கடந்த 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட பகுதிக்குள் வரும் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் பதிவு செய்ய முடியாது. விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ முடியாது என்ற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதால், அரசின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. 

இந்நிலையில், 2009-ம் ஆண்டு திடீரென மாவட்ட நிர்வாம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை செய்த பத்திர பதிவுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. இது மசினகுடி பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின், இப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வழக்கில் இவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. மாறாக இவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. மேலும், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களைச் சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...