உதகையில் கட்டுமானப் பணியின் போது மண் சரிந்ததில் தொழிலாளி பலி

நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 



உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள வண்டிசோலை பகுதியில் பழைய வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 10-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட மண்ணை லாரியிலிருந்து மண்ணை இறக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பணியில் அத்திக்கல் கிராமத்தைச் சேர்ந்த துரை (55) என்பவரும் இருந்துள்ளார். 

மண் இறக்குவதற்காக மண்வெட்டி தேவைப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் துரையிடம் மண்வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இருந்து மண்வெட்டி எடுக்க அவர் சென்றுள்ளார். அப்போது, திடீரென மண் சரிந்து துரையின் மேல் விழுந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் துரையின் மேல் மூடியிருந்த மண்ணை அகற்றினர். தொடர்ந்து, ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...