உலக சிட்டுக் குருவிகள் தினம் : மீண்டும் கேட்கட்டும் 'கீச்' சத்தம்..!

உணவுச் சங்கிலியை முறையாக இயங்கச் செய்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் சமீப காலமாக காணாமல் போய்விட்டன. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர் வீச்சுக்கள் தான் சிட்டுக் குருவி இனத்தை அளித்து வருகின்றது என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.


கோவை: உணவுச் சங்கிலியை முறையாக இயங்கச் செய்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் சமீப காலமாக காணாமல் போய்விட்டன. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர் வீச்சுக்கள் தான் சிட்டுக் குருவி இனத்தை அளித்து வருகின்றது என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லாமல் சில செல்போன் டவர்களை சாடி வந்த நிலையில், நம் வாழ்க்கை சூழல் மாறியதே சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என்று கூறுகின்றனர் சிட்டுக் குருவி ஆர்வலர்கள். 



இது தொடர்பாக பறவைகள் மருத்துவர் நிவேதிதா கூறுகையில், "சிட்டுக் குருவிகள் பெரும்பாலும் சந்தை போன்ற இடங்களிலேயே காணப்படுகின்றன. மனிதனுக்கும், இந்த பறவை இனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனிதன் அமைத்து வாழ்ந்த பாரம்பரிய வீடுகள் சிட்டு குருவிகளுக்கு வாழ்விடத்தைத் தந்தன. சந்தையில் சிதறிக்கிடக்கும் பொருட்கள் அவற்றிற்கு உணவாக அமைந்தது. தற்போது அவரை சூப்பர் மார்கெட் மற்றும் வணிக வளாகங்களின் கூரைகளுக்கு இடம் மாறியுள்ளன." என்றார்.

மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சூழல் அனுதினமும் மாறி வருவதே சிட்டுக் குருவிகளை மாயமாக்கி வருவதாகக் குற்றம் சாட்டுகிறார் சிட்டுக் குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன். இது குறித்து அவர் சிம்பிளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- 

முந்திய காலகட்டத்தில் நமது வீடுகளைச் சுற்றிலும் புதர்கள் மற்றும் காய்கறிச் செடிகளை வளர்த்து வந்தோம். அந்த செடிகளில் இருக்கும் காய்கறிகளும், பூச்சிகளும் சிட்டுக் குருவிகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. தயாரிக்கப்பட்ட, தற்போது நம் வீடுகளைச் சுற்றி புதர்கள் இல்லை. இதுவே, சிட்டுக் குருவிகள் நகரப் பகுதியை விட்டு சென்றதற்கான முக்கிய காரணம். தற்போது அதற்கான வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். 



சிட்டுக் குருவிகள் வாழத் தகுந்த வகையில் மரத்தால் தயாரிக்கப்பட்ட செயற்கையான கூடுகளை தயாரித்துள்ளோம். அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த கூடுகளை வீட்டின் முன் பகுதியில் பொருத்தி, அதில் உணவிடுவதன் மூலமாக மீண்டும் சிட்டுக் குருவிகளின் 'கீச்' சப்தத்தை நம்மால் கேட்டிட முடியும். 

சிங்காநல்லூர், வடவள்ளி போன்ற கோவையின் பல்வேறு பகுதிகளில் இந்த செயற்கைக் கூடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கூடுகளில் தற்போது சிட்டுக் குருவிகளின் வருகையை நம்மால் காண முடிகிறது. சிட்டுக் குருவிகளை காப்பாற்ற நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அவற்றிற்கான கூடுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். (தொலைபேசி எண் : 99438-50907‬)

இவ்வாறு அவர் கூறினார். 

செயற்கை கூடுகளை நம் வீட்டு வாசலில் அமைத்து, அவற்றிற்கான உணவையும் அளித்து மீண்டும் 'கீச்' சத்தம் கேட்டிடுவோமே..! 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...