இந்த ஆண்டு சிறப்பாக அமையும்: மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை நம்பிக்கை

நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை: நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோட்டர் சைக்கிள் பந்தயங்களில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான 'மாருதி சுஷிகி டிசர்ட் ஸ்ட்ரோம் 2018' என்ற தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதல்சுற்று கோவையில் இன்று தொடங்கியது. இதில், டி.வி.எஸ்., அணிக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) என்ற இளம் வீராங்கனை பங்கேற்றுள்ளார்.

இந்த மோட்டர் சைக்கிள் பந்தயம் குறித்து அவர் கூறுகையில்," கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு இடர்பாடுகளால் போட்டியின் 2-வது நாளே வெளியேற நேரிட்டது. ஆனால், இந்த ஆண்டில் சிறப்பாக செயல்படுவதற்காக ஆயத்தமாக உள்ளேன். நான் டி.வி.எஸ். அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு திருப்பு முனையாக இருக்கும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," இவ்வாறு பேசினார்.

வரும் 23-ம் தேதி முடிவடைய உள்ள இந்தப் போட்டி நேற்று நொய்டாவில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...