தொடர் மழையால் உழவர் சந்தை வியாபாரிகள் கடும் அவதி

நீலகிரியில் பெய்து வந்த தொடர் மழையால் உழவர் சந்தைப் பகுதிகளில் கூரைகள் புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி : நீலகிரியில் பெய்து வந்த தொடர் மழையால் உழவர் சந்தைப் பகுதிகளில் கூரைகள் புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 



நீலகிரி மாவட்டத்தில் வரும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இந்த நிலையில், மதியம் 12.30 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்தது. இதேபோல, கோத்தகிரி, கோடநாடு போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



இந்நிலையில், உதகை உழவர் சந்தையில் தற்போது விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழை மற்றும் வெயில் நேரங்களில் பாதுகாப்புக்காக புதிதாக மேற்கூரைகள் உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடியாத நிலையில், இன்று பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாமல் கடைகளுக்குள்ளும், உழவர் சந்தை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், காய்கறிகள் சேதமடைந்தன. இதன் காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் உழவர் சந்தைப் பகுதியை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை முழுமையாக செய்து முடித்துத் தர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...