திருக்குறளை தவிர பட்ஜெட்டில் வாசிக்கப்பட்ட அனைத்துமே பழசு : கமல் கருத்து

முதலில் தோன்றும் திருக்குறளை தவிர பட்ஜெட்டில் பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

முதலில் தோன்றும் திருக்குறளை தவிர பட்ஜெட்டில் பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டை நேற்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பட்ஜெட் தொடர்பான தனது கருத்துக்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:- 2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்ய வேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கை பற்றிய எம் கருத்து.

முதலில் தோன்றும் குறளை தவிர, இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவருக்கு சிறப்பான திட்டம் ஏதும் இல்லை. எம் தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க இதைவிட சிறந்த பிரதிநிதிகள் தேவை. வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கும் மேல், அதில், பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள். ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் 4 லட்சம் இளைஞர்களே திறன் பெற்றனர். அதிலும், 1 லட்சம் இளைஞர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு எங்கே..?

மேற்கு தமிழகத்தினரின் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தங்களுக்கு நீர் வழங்குமெனப் பல ஆண்டுகளாக காத்திருக்க, இம்முறை அறிவித்த ரூ. 250 கோடியும் சென்ற ஆண்டைப்போல கானல் நீராய் ஆகிவிடுமோ..?. குடிமராமத்துக்கும் தற்போது சென்ற ஆண்டைப்போல ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை எங்கே செலவிடப்பட்டது என்ற விளக்கம் கிடைக்குமா..?. ரூ. 27 ஆயிரம் கோடி பள்ளிக்கல்விக்கு செலவழித்த பின்னரும், எம் பிள்ளைகள் தேசிய சராசரியை விட பின் தங்கியுள்ளனர். இது தான் தரமான கல்வியா..?, எங்களுக்கு செலவீடல்ல, நல்ல விளைவுகளே தேவை. 

2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ரூ. 2.42 லட்சம் கோடியில் ரூ. 62 ஆயிரம் கோடியே செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்புரிவோருக்கு ஊழலும், தாமதமும் இன்றி உரிமங்கள் வழங்கட்டும் இந்த அரசு. சென்னை மாநகரம் இந்தியாவின் 23 நகரங்களில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கிறது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடி அதனை உயர்த்த உதவட்டும். அளவிற்கு அதிகமாக ஆசைப்படுகிறோமா..?. என் பகுத்தறிவு ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே ஏன்..? காணாமல் போன ஆயிரம் சிலைகளை போல துறையையும் காணாமல் போய் விட்டதோ..?.

வக்ஃப் போர்டு தேர்தலை திடீரென ரத்து செய்தது தமிழக அரசு, தேர்தலையே நடத்தாத அரசு நிதிநிலை அறிக்கையில் தங்களுக்கு அளிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றும் என சிறுபான்மையினர் எப்படி நம்புவர்..? ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் ரூ. 45 ஆயிரம். எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவருக்கு எங்கள் கண்ணீரால் நனைந்த கண்டனம். இவ்வாறு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...