மகள் சாவில் மர்மம்: விசாரணை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை: மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

ஆவரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ரா-காளீஸ்வரன் தம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா(13).



குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா தனது மகள் பவித்ரா-வை பூ மார்கெட் அருகில் உள்ள சாரதாமணி தேவி பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று காலை சித்ரா-வை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் பவித்ராவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது பவித்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சித்ரா என்ன நடந்தது? என்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சித்ரா, இந்த மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...