ஐன்ஸ்டீனுக்கு அடுத்த விஞ்ஞானி என்று புகழப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

தலைசிறந்த அறிவியலாளர் என்றும், ஐன்ஸ்டீனுக்கு அடுத்த விஞ்ஞானி என்று உலக அளவில் புகழப்பட்ட இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.


தலைசிறந்த அறிவியலாளர் என்றும், ஐன்ஸ்டீனுக்கு அடுத்த விஞ்ஞானி என்று உலக அளவில் புகழப்பட்ட இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1963-ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திக்கூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். 

இன்று காலமான விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தவர். இவர் 21-வது வயதில் (1963ம் ஆண்டு) மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 

அண்டவியலும் (Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (Quantum Gravity) ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும். கருந்துளையினும் (Black holes) துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன. அதன் மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என ஹாக்கிங் தனது ஆராய்ச்சி முடிவில் ஆதாரத்துடன் காட்டினார். தனது பெயருக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...