விடிய விடிய மழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை..!

நெல்லையில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை: நெல்லையில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தேன் தமிழகமான நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகள் முழுவதுமாக நீரில் மூழ்கின.

நெல்லையில், இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குற்றாலத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் சென்றனர். தற்போது அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...