ஏர்செல்லை தொடர்ந்து பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு: பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் ஏர்செல்லின் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் ஏர்செல்லின் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் சேவை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக முடங்கியது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு ஏர்செல் எண்ணைக் கொடுத்து வைத்திருந்தவர்கள் இன்னலுக்கு உள்ளாகினர். எனவே, ஏர்செல் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஏர்செல் நிறுவனத்தின் சேவை மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இருக்கும் தடம் தெரியாத அளவிற்கு சேவைகள் முடங்கியுள்ளது. இதனால், ஏர்செல் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். அதற்கு, ஏற்றாற்போல, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். தங்களது சேவையை மாற்றிக் கொண்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால், இது நீடிக்கவில்லை.

கடந்த ஓரிரு நாட்களாக, பிற தொலைதொடர்பு சேவைகளிலும் கோளாறு ஏற்பட்டு வருகிறது. செல்போன் உபயோகத்தில் இருக்கும் போதே, அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் பதில் வருகிறது. சில நேரங்களில் எந்தவிதமான பதிலும் இன்றி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். மேலும், ஏர்செல்லை தொடர்ந்து, பிற சேவைகளும் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், சீரான தொலைதொடர்பு சேவை எது எனத் தேடும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நாகரீகமான இந்தக் காலகட்டத்தில், செல்போன் எண்ணை வைத்தே ஆம்புலன்ஸ் சேவை, சமையல் எரிவாயு புக்கிங், வங்கிக் கணக்கு, ஆன்லைன் கேப்ஸ், ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே செய்கின்றனர். அத்தியாவசியமாகிய மாறியுள்ள தொலைதொடர்பு சேவை, ரத்தாவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...