மின்கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த நபரால் பரபரப்பு

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூருவைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் அய்ரின் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள தனது மனைவியைப் பார்க்க பேருந்தில் வந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பேருந்து வந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்ரின் திடீரென்று தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி, மேட்டூர் சாலையில் ஓடியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அவர் திடீரென அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். பின்னர், அப்பகுதி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்புதுறை வரவழைக்கப்பட்டு அவரை கீழே இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மின்கம்பியிலேயே அய்ரின் அங்கும், இங்கும் ஓடியதால் கீழேஇறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட அவர், மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...