எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்குச் செல்லும் - ஜவாஹிருல்லா

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 



இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் முஸ்லீம்கள் சட்ட ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது மத்திய இணை அமைச்சருக்கு சரியான நிலைப்பாடு இல்லை. தமிழகத்தில் கொள்வதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் பெறலாம் என்பது தான் பா.ஜ.க வின் திட்டம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டது தமிழகத்தில் உயர்கல்வித் துறை லஞ்சமயமாகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமனம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும். ஜன நாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்கள் விரும்பும் அரசு அமையும்.

நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் திரைப்படங்களில் சிறந்த நடிகர்கள் அதே போல அரசியல் களத்திலும் நல்ல நடிகர்கள் என்று தான் பார்க்கிறேன். தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் இருந்த போதெல்லாம் இவர்கள் மவுனம் சாதித்தனர். தற்போது இவர்கள் அரசியல் பக்கம் திரும்புவது ய நலத்திற்காகத் தான். மற்ற கட்சிகளை குறித்து விமர்சிப்பதற்கு கமலஹாசன் எந்த ஒரு தகுதியும் இல்லை." என்று அவர் கூறினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...