பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு : உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டி பஞ்சாயத்தில் 3,000 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்த ஊருக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசடைவதால் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



மேலும், பகல் நேரங்களில் குறைந்த அளவில் புகையினை வெளியேற்றும் தொழிற்சாலை இரவு நேரங்களில் அதிக அளவில் புகையினை வெளியேற்றுவதால் இரவு நேரங்களில் காற்று அதிக அளவில் மாசடைந்து சுவாச கோளாறுகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.



இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையினால் 50-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...