பிடிவாரண்ட்டைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் சரிதா நாயர் : வழக்கு விசாரணை பிப்., 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.

கோவை : காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட  வழக்கில் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.  

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளி பகுதியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார்.

நிறுவனங்களில் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் எனபரிடம் ரூ.28 லட்சம் , ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இவ்வழக்கு  விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து 4 முறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் ஆஜராகவில்லை. 

இதனால்,சரிதாநாயர் மற்றும் ரவி இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சாரதா நாயர் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...