தொடர் வண்டியில் வாங்க...! மிதிவண்டியில் போங்க...!

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை வழி ராமேஸ்வரம் ரயில்கள் வரவேற்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் அறிமுகம் - கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

கோவை : கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை வழி ராமேஸ்வரம் ரயில்கள் வரவேற்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் அறிமுகம் - கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

திடீரென்ற பேருந்து கட்டண உயர்வினால் மக்கள் வருத்தத்தில் இருக்கும் இச்சமயத்தில், இந்திய ரயில்வே துறை கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை, ராமேஸ்வரம் வரை மூன்று புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் வரவேற்வக்கத்தக்க பாராட்டப்படவேண்டிய  விசயமாகும். 

புதிய அறிவிப்பின்படி, கோவையில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் ரயில், பொள்ளாச்சிக்கு 6:45 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை  7:15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு காலை 8:30 மணிக்கு கோவை சென்றடையும். அதேபோல, மாலை 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 7:15 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைகிறது. இரவு 7:45 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து திரும்பும் ரயில், இரவு 9:00 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இச்சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இருக்கும். மேலும், மூன்று மாதத்திற்கு இச்சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மக்களின் தொடர் 

 பயன்பாட்டினையும், பயனாளர்களின் எண்ணிக்கையையும் பொருத்து தொடர்ந்து இந்த ரயில்களின் பயன்பாடு நீட்டிக்கப்படும். 

பேருந்து கட்டணங்களிலிருந்து விடுபடும் நோக்கிலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் விதமும் பெரும்பான்மையான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துவது சிறப்பு. ஆகவே, இந்த புதிய ரயில்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு மற்றும் இச்செய்தியினை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கும் விதம் கோவை  சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் பின்வரும் இரண்டு புதுவிதமான போட்டிகளையும், பரிசுகளையும் அறிவித்திருக்கிறது. 

முதல் போட்டியாக கோவையிலிருந்து புறப்படும் இந்த புதிய ரயிலினை பொள்ளாச்சி வரை சென்றவர் அல்லது பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்தவர்கள் மற்றும் கோவையிலிருந்து பொள்ளாச்சி முதல் பழனி, மதுரை, ராமேஸ்வரம் வரை பயணிக்கும் பயனாளர்கள்,  டிக்கெட்டை அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் எங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் டிராப் பாக்சில் போடலாம். மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் இருக்கும் எங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அலுவலகத்திலும் நேரடியாக வழங்கலாம். நேரில் வர இயலாதவர்கள் தங்களின் டிக்கெட் எண், பிஎன்ஆர் நெம்பர், தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எங்களின் [email protected] எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது பின்வரும் எண்களுக்கு எஸ்எம்எஸ்-வாட்சப்பிலும் தெரிவிக்கலாம். (99947 64375, 94421 07546, 98948 26029, 98422 11993, 94435 78224) நாங்கள் அனைவரது பெயரையும் இணைத்து குலுக்கல் முறையில் வாரம் ஒருவருக்கு ஒரு சைக்கிள் பரிசளித்து கவுரவிக்கவிருக்கிறோம். சைக்கிள் பரிசானது பெட்ரோல் சேமிப்பு, பேருந்து கட்டணத்திலிருந்து தப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் நோக்கில் வழங்கப்படுகிறது. 

இரண்டாவது போட்டியாக புதிய ரயில்களின் நேரம் மற்றும் மேலே கூறியுள்ள கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்பின்  புதிய ரயில்களின் விழிப்புணர்விற்கான போட்டியையும் தங்களின் நண்பர்கள் மற்றும் சோசியல் நெட்வொர்க்காகிய பேஸ்புக், டுவிட்டர் முக்கியமாக குறைந்தது 100 வாட்சப் குரூப்களுக்கோ அல்லது தங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டு தாங்களின் பெயர் மற்றும் தாங்கள் அனுப்பிய விபரங்களை எங்கள் சிட்டிசன் வாய்ஸ் கிளப் அலுவலகத்தில் தெரிவிக்கும் முதல் 100 நபர்களுக்கு நமது மறைந்தும் மக்கள் மனதில் மறையாத முன்னாள் குடியரசுத் தலைவர்  ஏ.பி.ஜே. அப்துல்கலாமின்  புத்தகம் பரிசாக வழங்கப்படும். 

கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரசை ஏபிஜே அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் எனும் கோரிக்கையை வலியுறுத்தியும், அவரின் நினைவாகவும்  ஏபிஜே அப்துல்கலாமின்  புத்தகம் வழங்கப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் இச்செய்தியினை பரவலாக்குமாறு கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. மேலும் மத்திய ரயில்வேத்துறை மூலமாகவோ அல்லது கோவையின் மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூக அமைப்புகளின் உதவியுடனும் இப்பரிசுகள் தொடர்ந்து வழங்கப்படும்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...