9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக கண்காட்சி பிப்.2ல் துவக்கம்

9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக (பில்ட் இன்டெக்) கண்காட்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று துவங்கி 5-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை: 9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக (பில்ட் இன்டெக்) கண்காட்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று துவங்கி 5-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஹூசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், கொடிசியா சங்கத் தலைவர் சுந்தரம், பில்ட் இன்டெக் சேர்மன் கார்த்திகேயன், கொடிசியா கெளரவ செயலாளர் குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.



அப்போது, கொடிசியா சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில், "இந்தக் கண்காட்சியை காலை 10 மணி முதல் 2 மணி வரை  வணிக பார்வையாளர்களும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ரூ.50 கட்டணம் செலுத்தி பொது மக்களும் பார்வையிடலாம்.

இதில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், புது தில்லி, ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு 220 அரங்குகள் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 300 அரங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பில்ட் இன்டெக் சேர்மன் கார்த்திகேயன் பேசுகையில், "கொடிசியா அரங்கில் ஏ, பி, சி அரங்குகளில் கட்டிட பொருட்களின் கண்காட்சியும், ஈ அரங்கு முழுக்க பர்னிச்சர் கண்காட்சியும் இடம் பெறும். இந்த கண்காட்சி 1,60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு 50 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் சமீபத்திய தொழில்நுட்ப கட்டுமான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் இடம் பெற உள்ளது. கட்டிட பொருட்கள், சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர்கள், எல்.இ.டி லைட்டிங், நீச்சல் குள தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம் பெறும்" என தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...