பிணத்திற்கு பணம் கேட்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள்: உறவினர்களிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியானது

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோவை, ஜனவரி 25

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தின் மேற்குமண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

நாள் ஒன்றிற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர். 

விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகும் நபர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவ்வாறு இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளது

இந்த நிலையில், இம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக ரூ.500 லஞ்சமாக கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 



சடலத்தை எடுத்துச் செல்வதற்கான சான்று வழங்குவதற்காக அந்த ஊழியர், இறந்தவரின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டும் மிரட்டும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நாள் ஒன்றுக்கு அம்மருத்துவமனையில் 5 முதல் 10 சடலங்கள் வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறாக அந்த அனைத்து சடலங்களையும் உறவினர்களிடையே ஒப்படைப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...