கே.ஜி.குழுமத்தின் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்ட முன்பதிவு குடியரசு தினத்தில் துவக்கம்

கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம் தேதியன்று துவங்க உள்ளது.

கோவை, ஜனவரி 24

கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம்  தேதியன்று துவங்க உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கிருத்திகா விக்ரம், சஞ்சய் விஜயகுமார் மற்றும் கண்ணையன் ஆகியோர் இத்திட்டம் குறித்து கூறியதாவது:-

கே.ஜி.குழுமம் 2012-ம் ஆண்டு முதல் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நான்காவது அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் காளப்பட்டி அடுத்த நேரு நகரில் 136 ஏக்கர் பரப்பளவில் 136 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், 400 சதுர அடியில் ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் முதல் துவங்குகிறது. 700 சதுர அடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தரமான பொருட்கள் கொண்டு கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். இதற்கான முன்பதிவு அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள கே.ஜி.ஹவுஸில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று காலை 8 மணியளவில் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.

இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும். பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...