சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரை கோவையில் தொடக்கம்

சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரையை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 22

சகோதரி நிவேதிதை 150வது பிறந்தநாளையொட்டி ரதயாத்திரையை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 



கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் மற்றும் கல்வியாளர்கள் ஆன்மீக மையங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று துவங்கிய ரதயாத்திரை பல்வேறு மாவட்டங்களின் வழியாக சென்று வரும் பிப்ரவரி 22-தேதி சென்னையில் நிறைவடைகின்றது. இந்த ரதயாத்திரையானது 30 நாட்கள், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 3,000 கி.மீ பயணம் செய்து 2 லட்சம் மாணவிகளை சந்திக்கின்றது. 



ரதயாத்திரை துவக்க விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், நான் பேசுவதற்காக நிவேதிதை பற்றிய புத்தகத்தை படிச்சிட்டு வந்ததை, தனக்கு முன்னாடி அனைவரும் பேசிவிட்டனர். கரும்பு சக்கை மாதிரி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் உங்கள் முன்னாள் நிற்கின்றேன். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக இருந்த மார்கெரட் நோபல்தான் சகோதரி நிவேதிதை. வாட்ஸ் ஆப்-பில் இப்போது வரும் சிஷ்யைகளை பத்தி படங்கள் வருகின்றது. அந்த சிஷ்யைகளை பற்றி நான் பேசலை. புரிஞ்சா புரிஞ்சுக்கங்க. சுவாமி விவேகானந்தர் - சகோதரி நிவேதிதா இடையேயான உறவு தந்தை மகள் உறவைப் போன்றது. பெண்களுக்கு வீர உணர்வை ஊட்டு என விவேகானந்தர் நிவேதிதையிடம் தெரிவித்தார். விவேகானந்தரின் போர்வாளாக இருந்தவர் நிவேதிதை. 



எனக்கு தேவையான அனைத்து கருத்துகளும் சனாதான தர்மத்தில் கிடைத்தது. நான் ஏன் மற்றவர்களைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்த நிலையில், சகோதரி நிவேதிதை குறித்து படிக்கும் வாய்ப்பினை வானதி சீனிவாசன் ஏற்படுத்திக் கொடுத்தார். அனைத்துக் கூட்டங்களிலும் இனி விவேகானந்தர், நிவேதிதா குறித்து பேசுவேன். செல்போனும், கேமராவும், இணையமும் வராமல் இருந்திருந்தால் பாலியல் பலாத்காரங்கள் நடக்கவே நடக்காது. இவ்வாறு நடிகர் விவேக் தெரிவித்தார்.



 

இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், காவி நிறம் என்பது இந்துக்களின் அடையாளம் என முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால், காவி என்பது இந்துக்களின் நிறம் அல்ல. காவி என்பது பாரததேசத்தின் நிறம். காவி நிறத்தை வைத்து சகோதரி நிவேதிதா முதன்முதலில் தேசிய கொடியை வடிவமைத்தார். நாட்டின் தேசியகீதமாக இருக்க வேண்டியது ”வந்தே மாதிரம் பாடல்” என்பதையும் வலியுறுத்தியவர் சகோதரி நிவேதிதை. 



மேலும். ஒவ்வொரு இந்தியனின் புனிதநூல் இந்திய அரசியலமைப்பு சட்டம் என மோடி அனைத்து கூட்டங்களிலும் தெரிவித்து வருகின்றார். சிவன் சொத்து குலநாசம் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால், இந்திய நாட்டிற்கு கேடு என்பதே கிடையாது. மாணவிகள் அனைவரும் நிவேதிதைகளாக தோன்ற வேண்டும். என்றார். 



நிகழ்ச்சியின் முடிவில் நிவேதிதை மற்றும் விவேகானந்தர் உருவசிலைகளுடன் கூடிய ரத யாத்திரையை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலர் தூவி துவங்கி வைத்தார். 

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...