பேருந்து கட்டண உயர்வுக்கு தி.மு.க.,வே காரணம்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட நிலுவை தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 20

தி.மு.க., ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட நிலுவை தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு ரூ. 1.17 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், விவசாயிகளின் கடந்த முப்பது ஆண்டுகால கோரிக்கையான நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கான கோரிக்கையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதனை முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு நிறைவேற்றி, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருவதற்கு உதாரணம். மேலும், பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 6 மாத காலத்தில் நாரயணசாமி நாயுடு மணி மண்டபம் கட்டி முடிக்கப்படும். 

தி.மு.க,. ஆட்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறு ஒரு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதால், இதுவரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை கொடுக்க முடியாமல் உள்ளது. தி.மு.க., ஆட்சி காலத்தில் வைத்து போன நிலுவை தொகையை, போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களை விடக் குறைவு. என்றார். 

இதனையடுத்து, வையம்பாளையம் பகுதியில் 1.80 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...