பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் : டிடிவி ஆதரவாளர் செந்தில் பாலாஜி

அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.


கோவை, ஜனவரி 20

அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக அரசு உயர்த்தி உள்ள இந்தப் பேருந்து கட்டண உயர்வால் பேருந்தை பயன்படுத்தும் ரூ. 2 கோடி மக்கள் பேருந்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களின் சேவை துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை அரசு வழங்கவில்லை.

மேலும், இந்தக் கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு செயல்படவில்லை. ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவோம். தனிக்கட்சி துவங்கும் முயற்சிகளில் எதுவும் தற்போது டிடிவி தினகரன் ஈடுபடவில்லை. மேலும், நீதிமன்றத்தில் அதிமுக அம்மா என்ற பெயரில் இயங்க அனுமதி கேட்டு உள்ளார். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் தினகரன் தலைமையில் போட்டியிட்டு வெல்வோம். 

டீசல் விலை உயர்வை அடிப்படையாக வைத்து டிக்கெட் விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு என வந்தால் கூவத்தூர் பழனிசாமியின் அரசு வீட்டிற்கு செல்லும். கூவத்தூர் பழனிச்சாமி மாமியார் வீட்டிற்கு செல்வார். என்றார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...