இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி

பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 19

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சலிம் அலி மைய ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்கை கல்வியின் தலைவரான பி. ப்ரமோத் கூறுகையில், இந்த நிகழ்வில் 50 பள்ளிகளில் இருந்து 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மாணவர்களிடையே இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் கல்வி, ஓவியம், பென்சில் ஷேடிங், கட்டுரை, கவிதை எழுதுதல், கதை எழுதுதல், வினா- விடை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு +‭91 94431 67773‬ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...