சரத்பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது; தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்

டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பூர், ஜனவரி 19

டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.சாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் உள்ள யு.சி.எம்.எஸ் கல்லூரில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். 

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை கொண்டுவரப்பட்டு பின்னர் திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. அதன் பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.



இதனிடையே மருத்துவ மாணவரின் உடலுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன் மற்றும் ஜி.கே வாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மருத்துவமாணவர் சரத்பிரபு மரணம் வேதனையளிக்ககூடியது. நல்லதொரு சிறந்த மருத்துவ மாணவரை இழந்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சொல்லி அனுப்பியுள்ளார் அதன்படி அவர்களுக்கான தேவைகளை அரசு செய்யும் சரத்பிரபுவின் மரணம் குறித்து அவரது தந்தையார் பல்வேறு சந்தேகங்களை சொல்லியுள்ளார். அதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டு அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஜி.கே.வாசன் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஏற்கனவே திருப்பூர் மாணவர் அனைவரும் சரவணன் மரணத்தில் விசாரணைக்கு பல ஏஜென்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என அவரது தந்தையே தெரிவித்துள்ளார். சரத்பிரபு விசயத்தில் அதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

உடனடியாக வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்காக தமிழக அரசு அந்தந்த மாநிலங்களில் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்.

கடந்த முறை சரவணன் வழக்கில் விசாரனை காலம் தாழ்ந்து அமைந்தது இன்னும் மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது" என்றார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...