கோவையில் சிறுவனுக்கு தவறாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

கோவையில் சிறுவன் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 18

கோவையில் சிறுவன் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகன் விஷ்ணு (4). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடதுபுற சிறுநீரகம் சராசரி அளவை விட சிறியதாக இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது முதல் சிறுவன் கடும் வயிற்று வலியால் அவதியுற்றுவந்தார். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, வயிற்றுப் பகுதியில் ஒரு துணி மற்றும் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட பஞ்சு இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வினோத்குமார், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு துணி மற்றும் பஞ்சினை அகற்றுமாறு மருத்துவர்களிடம் கோரியதன் பேரில் அவை அறுவை சிகிச்சை மூலமாக அது அகற்றப்பட்டது.

இந்த சூழலில், தன் மகனுக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட எஸ்.ஆர்.ஜி மருத்துவமனை மருத்துவர்களான தர்மேந்திரா, வினோத் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வினோத்குமார் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி எஸ்.ஆர்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்களான தர்மேந்திரா, வினோத் மற்றும் கண்ணதாசன் ஆகிய மூவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...