குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 18
குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் போதைப் பொருட்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்தான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று (ஜன. 17) இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் துவங்கியது.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மனநல ஆலோசகர்கள் பங்கேற்று குழந்தைகளின் மனநிலை மற்றும் போதையில் அடிமையாதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியினை இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் மேலாண்மை நிறுவனர் சரசுவதி கண்ணையன் துவக்கி வைத்தார்.
கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை போதைப் பொருட்களால் குழந்தைகள் அடிமையாகுவது 5 முறை அதிகரித்துள்ளது என பாராளுமன்றம் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் 105,173 டான்சின் என்னும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.