ஜெயலலிதா 4-ம் தேதி உயிரிழந்தார் என்ற திவாகரன் கருத்துக்கு தினகரன் மறுப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேது இறந்துவிட்டதாக திவாகரன் கூறுவது அவருடைய கருத்து என்று எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 17

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேது இறந்துவிட்டதாக திவாகரன் கூறுவது அவருடைய கருத்து என்று எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- 

ஜெயலலிதா மரணத்திற்கு முந்தய நாள் மாலை அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டது என தகவல் வந்தது. 

இருதய பிரச்சினை ஏற்பட்டதை திவாகரன் மாற்றி கூறியிருக்கலாம். ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல் கிடைத்து அப்பல்லோ  மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு எக்மோ மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது.

மரணம் தொடர்பாக மருத்துவர்கள் சொல்வதை மட்டுமே ஏற்க முடியும்.

திவாரகன் கூறியுள்ள கருத்திற்கு அப்பல்லோ நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திருப்பூர் மருத்துவ மாணவர் மரணம் தொடர்பாக உரிய முறையில்  விசாரணை நடத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வேதா இல்லம் அரசுடைமையாக்குவதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. 

இ.பி.எஸ்  அரசு எதை செய்தாலும் அதை தவறு என சொல்லும் அரசியல்வாதி நான் கிடையாது.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், அதை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னணியில் இருந்த அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர். 

எம்.எல்.ஏ வாக சட்ட சபையில் 4 நாட்கள் அனுபவம் புதிய அனுபவமாக இருந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...