பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கோடப்மந்து கால்வாய் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி, ஜனவரி 16

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாய். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தக் கால்வாய் ஓடுகிறது. இதன் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது. 

இதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 4.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. 

கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தக் கால்வாயை தூர்வாரப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்ற திட்டத்தில் தடம்பதித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, கோடப்மந்து கால்வாயை மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...