நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி, ஜனவரி 16

நீலகிரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியரான ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பதவி வகித்து மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஜான் சலிவன் சிலை கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது, உதகையில் செயல்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1818 - 1819ம் ஆண்டுகளில் கோத்தகிரி கண்ணேரிமுக்கு கிராமத்தில் செயல்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான் சலிவன் பணியாற்றினார். அவரது காலத்தில், மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ஜான் சலிவனின் 163-வது நினைவு நாளையொட்டி, கண்ணேரிமுக்கு நினைவகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...