ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியருக்கு உப்பு அனுப்பும் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 16

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



வார இதழ் ஒன்றிற்குக் கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையில் வெளியிட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி உப்பு அனுப்பும் போராட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர். 

கவிஞர் வைரமுத்து யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக மட்டுமே கூறியிருப்பதாகவும், பொதுவாக மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறி அவருக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும், சூடு, சொரணை வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தில் உப்பும் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, வைரமுத்து மேற்கொள் காட்டி எழுதியதாக சொல்லப்படுவது தவறு என்றும், அப்படி ஒன்றும் வெளிநாட்டவர் எழுதவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் ஜீயர் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவு பாஜக தரும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...