நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா சங்கர் விருது

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

ஜனவரி 15

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.வாசன் விருது இசைஞானி இளையராஜாவுக்கும், சிறந்த படத்திற்கான விருது அறத்திற்கும் என நகைச்சுவை, சிறந்த நடிப்பு, இயக்கம் என திரையுலகில் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாகுபலி படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் சத்யராஜூக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே இந்த விழாவின் போது, உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் நினைவாக நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா- சங்கர் விருதும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சத்யராஜூக்கு விருது வழங்கிய கவுசல்யா கூறுகையில், நடிகராக மட்டும் இல்லாமல் சாதிய அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் சத்யராஜ். தற்போதைய பெரும்பாலான நடிகர்கள் தனது தொழிலை மட்டும் பார்த்து வரும் நிலையில் சமுதாயத்தில் நிகழும் இன்னல்களைக் கண்டு, மக்களோடு மக்களாக நிற்கும் மனிதர்களில் ஒருவர் சத்யராஜ் என்றார்.

சத்யராஜ் இதுகுறித்து கூறுகையில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விருது குறித்து முன்பே என்னிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது வேறு ஏதேனும் மூத்த நடிகர்களின் கையால் இதனை பெறுவேன் என நான் நினைத்திருந்தேன். ஆனால், தற்போது கவுசல்யாவின் கையால் இந்த விருதினை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சமூகத்தில் தனக்கு ஏற்பட்ட சாதிய அடக்குமுறைக்கு அடிபணிந்து இருக்காமல் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கவுசல்யா பாராட்டுக்குரியவர். இங்குச் சாதிய அடிப்படை கட்டமைப்புகளை மாற்றினால் மட்டுமே தெளிவான சமூகம் பிறக்கும். அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் கவுசல்யா போன்ற ஒவ்வொருவரும் போராளிகளே என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...