திருமண ஆசைகாட்டி ஆண்களை ஏமாற்றிய பெண் கோவையில் கைது

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 11

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த சுருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட சுருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகன், சுருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சுருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இது போல் பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

மேலும், இதேப் போல் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் தம்மிடம் 43 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக நாமக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற மென்பொருள் ஊழியரும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38) ஆகிய மூவரையும் கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சுருதி பலரிடம் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதும், தனது பெயர்களையும் தனது குடும்பத்தினர் எனக் கூறுபவர்களின் பெயர்களையும் மாற்றிக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அதே கண்கள் என்ற திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளை பெண் ஒருவர் ஏமாற்றுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதேப் போல் தற்போது பெண் ஒருவர் திருமண தகவல் இணையதளங்கள் மூலம் அறிமுகமாகி பல லட்சம் மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சுருதி ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளதும் அந்த படம் இதுவரை வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...