சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந் கட்டாரியா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.

கோவை, ஜனவரி 11

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், காவல் துறை ஆணையர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன், போக்குவரத்துத் துறை துணை ஆணையர் சுஜித்குமார், பயிற்சி ஆட்சியர் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2015- 16ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016- 17ல் 1061 சாலை விபத்துகளால் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5369 விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், விதி மீறலில் ஈடுபட்டவர்கள் என 1,56,694 பேர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...