சகோதரியையும் அவரது மகளையும் கொன்று சகோதரர் தற்கொலை : கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் விபரீதம்

பண விவகாரத்தில் சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்த கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி இன்று உயிரிழந்தார்.

கோவை, ஜனவரி 10

பண விவகாரத்தில் சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்த கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி இன்று உயிரிழந்தார்.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது சகோதரி பாக்கியம் (68) என்பவரது வீட்டில் வசித்து வந்தார். அதே வீட்டில் பாக்கியத்தின் மகள் சாந்தி என்பவரும் வசித்து வந்தார். 

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது சகோதரி பாக்கியத்திடம் ரூ.4.5 லட்சத்தை மணி கடனாக வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பித்தராததால் அந்த பணத்தை திருப்பித்தருமாறு மணியிடம் பாக்கியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர், கால் வலி மருந்து என்று கூறி தேனில் விஷ மாத்திரை கலந்து நேற்று காலை பாக்கியம் மற்றும் சாந்தி ஆகிய இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை அருந்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மூன்று பேரும் வீட்டில் மயங்கிக்கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி மற்றும் மணி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாக்கியம் இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் பிரச்சனையால் சகோதரி மற்றும் அவரது மகளைக் கொலைசெய்துவிட்டு சகோதரரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...