கோவை மாவட்டம், முல்லி சோதனைச் சாவடி அருகே யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 10
கோவை மாவட்டம், முல்லி சோதனைச் சாவடி அருகே யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரமடை அடுத்த முல்லி சோதனைச் சாவடி அருகே அப்பகுதியைச் சேர்ந்த எம். செல்வம் (45) என்பவர் நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு யானை தாக்கி 17 பேர் உயிரிழந்தனர். தற்போது 2018-ஆம் ஆண்டில் கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல் முறை ஆகும்.