மதுக்கடையில் சில்லரை தராததால் மின்சார கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி அவரை மேலேயிருந்து கீழே இறக்கி விட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அவரை விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், மதுபானக் கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...