வின்சென்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே வசித்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
கோவை, ஜனவரி 8

கோவை, வின்சென்ட் ரோடு பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2007-ம் ஆண்டு இடிந்து விழுந்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு 356 வீடுகளில் வசித்து வந்தவர்கள் காலி செய்யப்பட்டு மீதம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு புது குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு வசித்து வந்தவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகில் வசித்தவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரிலேயே 192 குடும்பங்கள் வீடுகளை காலி செய்து கொடுத்ததாகக் கூறி சோஷியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அதில், வீடு இல்லாதவர்களுக்கு தமிழக அரசு இலவச வீடுகள் அளித்து வரும் நிலையில் தங்களுக்கு உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள வீடுகளில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.