நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகள் அமைக்க நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 8

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர நடைபாதை நிறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவை நஞ்சப்பா சலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளை மேம்பாலம் அமைக்கும் பணியின்போது அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடைகள் அமைக்க முற்பட்டபோது மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், காவல் துறையினரும் எங்களை கடை வைக்க அனுமதிக்கவில்லை.

மேலும், கடந்த 10 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவைக் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் தங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி கடை வைத்து பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...