இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றிய நபரிடம் போலீசார் விசாரணை

இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை, ஜனவரி 7

இணையதள திருமண தகவல் மையம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பி.என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவனை இழந்த இவர் தனியார் இணையதள திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார். இந்த நிலையில், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த புருசோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இவருக்கும் குமுதவள்ளிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், புருசோத்தமன் ஏற்கனவே இரண்டுமுறை திருமணமானவர் என்று குமுதவள்ளிக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புருசோத்தமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "புருசோத்தமனுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து குமுதவள்ளியை அவர் திருமணம் செய்துள்ளார். இதேப் போன்று 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...