'நீண்ட நாட்கள் உயிர் வாழ மாடித் தோட்டம் அவசியம்' - வேளாண் பேராசிரியர்

நீண்ட நாட்கள் உயிர் வாழ மாடித் தோட்டம் அவசியம். மாடித் தோட்டத்தில் நாம் வளர்க்கக் கூடிய காய்கறிகள் தான் சுத்தமானவை. எந்த விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளும் அடிக்காமல் இயற்கையான முறையில் அதனை வளர்ப்பதினால் நாம் அதனை உன்னும் போது நீண்ட நாட்கள் வாழமுடியும்

கோவை, ஜனவரி 7

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 'வேளாண் திருவிழா 2018' என்ற இரண்டு நாள் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. 

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று (ஜன. 7) மாடித் தோட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது அவர் பேசுகையில், "நீண்ட நாட்கள் உயிர் வாழ மாடித் தோட்டம் அவசியம். மாடித் தோட்டத்தில் நாம் வளர்க்கக் கூடிய காய்கறிகள் தான் சுத்தமானவை. எந்த விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளும் அடிக்காமல் இயற்கையான முறையில் அதனை வளர்ப்பதினால் நாம் அதனை உன்னும் போது நீண்ட நாட்கள் வாழமுடியும்.



மாடித்தோட்டம் அமைக்க வீட்டில் நாம் வேண்டாம் என தூக்கி எறியப்படும் பொருட்களான தேங்காய் நாறு, தேங்காய் மட்டை, காய்ந்த இலைகள், காய்களின் கழிவுகள் போதுமானவை. இவற்றை சேகரித்து பிளாஸ்டிக் பைகளில் அடுக்கி வைத்து இயற்கை உரங்களை செலுத்தி விதைகள் அல்லது நாற்றுக்களை நடவுசெய்தால் மாடித்தோட்டம் தயார்.

இந்த மாதிரியான தோட்டத்தில் சிறிய இடத்தில் நாம் தக்காளி, கீரை வகைகள், மிளகாய், கறிவேப்பிலை, கத்திரிக்காய் போன்றவற்றை பயிரிடலாம். இதனால் நம் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருப்பதோடு, வரும் தலைமுறையினருக்கும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

அன்றாடம் வாங்கும் காய்கறிகளின் செலவுகளை நாம் குறைப்பதினால் நம் பொருளாதாரம் மேம்படும். இடமே இல்லாத இடத்தில் கூட காய்கறிகளை பயிர் செய்யும் அளவிற்கு தற்போது கருவிகள் வந்துள்ளன. அது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும்."

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்தக் கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...